அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

 

எண்பது தொன்னூறுகளில் கமல் ரஜினி இருவருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர். அன்றைய ரசிகர்களுக்கு தங்கள் தலைவர் படம் மற்ற நடிகர்களின் படங்களை விட நன்றாக ஓடவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு இருந்தது . ஆனாலும் கமல் ரசிகர்கள் ரஜினி படங்களையும் ரஜினி ரசிகர்கள் கமல் படங்களையும் பார்த்து ரசிக்க தவறமாட்டார்கள். ரஜினிக்கும் கமலுக்கும் பொறாமையற்ற ஆரோக்கியமான போட்டி இருந்தது.ஆனால் தமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் ஆரோக்கியான போட்டி இல்லை. ஒரு நடிகரின் ரசிகர்கள் போட்டி நடிகரின் படங்களை புறக்கணிப்பது மட்டுமல்லாமல் அந்த படத்திற்கு மிகைப்படுத்தப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி அந்த படத்தை காலி செய்ய முயற்சிப்பதோடு தன் அபிமான நடிகரின் படங்கள் சுமாராக இருந்தாலும் சிறப்பாக இருப்பதாகவும் அதிக வசூல் செய்ததாகவும் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புகின்றனர். இது சினிமா தொழிலின் வளர்ச்சியை பாதிக்கும்.

தமிழ் சினிமாவை உலகெங்கும் கொண்டு சேர்த்த பெருமை ரஜினிகாந்தையே சேரும். அதிகம் வசூல் செய்த தமிழ்ப்படங்களின் வரிசையில் இன்றும் முதலிடத்தில் இருப்பது ரஜினிகாந்த் நடித்த 2.O திரைப்படம்தான். இந்த சாதனையை விஜய் முறியடித்தால் விஜய் நம்பர் ஒன் நடிகர் எனக் கூறலாம்.ஆனாலும் அதற்காக அவர் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு உரிமை கோருவது ஏற்புடையதல்ல. ஏனெனில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு உயிர் கொடுத்தவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தால்தான் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பெருமை. ரஜினிகாந்த் அவர்களுக்கு சூப்பர்ஸ்டார் அல்லாது வேறு பட்டம் கொடுத்திருந்தாலும் அந்த பட்டத்திற்கும் இதே மதிப்பு கிடைத்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபலமாக ரஜினிகாந்த் இருக்கிறார். ஆனால் தென்னிந்தியா மட்டுமே அறியப்பட்ட நடிகராக இருகாகிறார் விஜய்.

கறுப்பானவர்கள் கதாநாயகனாக முடியாது என்ற நடைமுறையை உடைத்த முதல் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முதலில் ஒரு வில்லன் நடிகர் ஹீரோ ஆன முதல் நடிகரும் ரஜினிகாந்த் அவர்கள்தான். உலக வரலாற்றிலேயே 72 வயதிலும் ஆக்சன் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.தனக்கென ஒரு ஸ்டைல் உடல் மொழியை உருவாக்கி வெற்றி பெற்றவர் ரஜினி. இன்றைய தலைமுறை நடிகர்களில் ரஜினிகாந்தின் ஸ்டைலை பின்பற்றாத நடிகர்களே இல்லை எனலாம்.இதில் அதிகம் ரஜினியை பின்பற்றி நடித்து முன்னேறியவர் விஜய்.

தான் ஒரு ரஜினி ரசிகன் என அடையாளப்படுத்தி ரஜினி ரசிகர்களின் ஆதரவால் வளர்ந்தவர் விஜய். ஆனால் அவர் இன்று அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கே ஆசைப்பட்டு You tube சேனல்களுக்கு காசு கொடுத்துப் சரத்குமாரை மேடையில் தன்னை சூப்பர் ஸ்டார் என கூற வைத்து பட்டத்தை அடைய துடிக்கிறார் விஜய்.

ரஜினிகாந்த் பாவம் நான்தான் சூப்பர் ஸ்டார் என அவரே சொல்லும்படி விஜயால் ஆகி விட்டது போன்ற மீம்ஸ்களை விஜய் ரசிகர்கள் பகிர்கின்றனர். பைரவி திரைப்படம் வெளியானபோது தாணு அவர்களால் ரஜினிகாந்திற்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகே ரஜினிகாந்த் பயன்படுத்தினார். அண்ணாமலை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என டைட்டில் வைக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டபோது அதை வேண்டாம் என மறுத்தவர் ரஜினிகாந்த். பின் தனது குருநாதரின் சொல்லை தட்ட முடியாமல் அதை ஏற்றுக் கொண்டார் ரஜினிகாந்த். அவர் என்றுமே எதற்கும் ஆசைப்பட்டவர் அல்ல.

சிவாஜிகணேசன் அவர்களின் பெயரைச் சொல்லி வளர்ந்தவர் அல்ல ரஜினிகாந்த்.ஆனாலும் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த பொழுது அவரது தலைமையில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.அதில் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டே, “திரைப்பட நகருக்கு சிவாஜி கணேசன் பெயரை வைக்காதது தவறு” என்று தைரியமாக என்று சுட்டிக் காட்டியவர் ரஜினிகாந்த். இந்த சம்பவம் மூத்த நடிகர் சிவாஜி கணேசன் மீது ரஜினிகாந்த்திற்கு உள்ள மரியாதையை அன்பை வெளிப்படுத்தியது..நடிகர் விஜயின் பங்ஷனில் மேடை ஏறிய சரத்குமார் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னபோது அதை ரஜினிகாந்தை பின்பற்றி முன்னேறிய விஜய் மறுத்திருக்க வேண்டும். அப்படி மறுத்திருந்தால் அவருடைய மதிப்பு கூடியிருக்கும். தேவையில்லாத சர்ச்சை ஏற்பட்டிருக்காது. அரசியல் ஆசையில் இருக்கும் விஜய்க்கு ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவும் கூட கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதை ஏற்பது போல் அமைதியாக இருந்தது அவரது சின்ன புத்தியையே காட்டுகிறது. நடிப்பிலும் சரி மாஸிலும் சரி குணத்திலும் சரி ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார்.ஒரே சூரியன்தான் ஒரே சந்திரன்தான். நூறாண்டுகளை கடந்தாலும் தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார்‌ ரஜினிகாந்த் மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *