அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து!

 

இன்றைய அவசர உலகில் நிதானமாகச் சமைத்துச் சாப்பிட முடியாதவர்கள் உடனே தேடிப்பிடித்து உண்ணக்கூடிய உணவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் காணப்படுகின்றன.

ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவு உண்மையில் உடலுக்கு ஏற்றதா என்பது தொடர்பில் தீவிரமான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அந்த ஆய்விற்கமைய, பதப்படுத்தப்பட்ட உணவை அடிக்கடி உண்ணாதவரைக் காட்டிலும் அதனை அடிக்கடி உண்பவருக்கு மன உளைச்சல் அல்லது பதற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அறிவாற்றலும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறது Harvard பல்கலைக்கழக ஆய்வு.

“பதப்படுத்தப்பட்ட உணவு வகை பெரும்பாலும் ஆரோக்கியமற்றவை. அவற்றை அதிகம் சாப்பிட்டால் உடலில் நோய்கள் பெருகும்” என பல்கலையின் ஊட்டச்சத்து தொற்றுநோயியல் பேராசிரியர் Frank Hu தெரிவித்துள்ளார்.

“உணவுப்பழக்கம் மனிதர்களின் மனநிலையைப் பாதிப்பதில்லை. ஆனால் அது பாதிக்கலாம் என்ற தலைகீழான உண்மையும் இருக்கிறது.

மன உளைச்சல் அல்லது பதற்றம் ஏற்படும்போது ஒருவர் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிட முற்படுவார். குறிப்பாக அதிகச் சீனி அல்லது ரசாயனச் சுவையூட்டிகள் கொண்ட உணவைத் தேடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *