வெளிநாட்டில் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள முக்கிய பதவி!

சியரா லியோனில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைக் கண்காணிப்பதற்காக இரண்டு இலங்கையர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் தலைவரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான ரசிங்க மற்றும் பிரபல இராஜதந்திரியான வேலுப்பிள்ளை கனநாதன் ஆகியோர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சர்வதேச அவதானிகள் ஆபிரிக்க நாட்டில் தேர்தல் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள இரண்டு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும் எனவும் பாராட்டியுள்ளனர்.

கனநாதன் முன்பு கென்யா மற்றும் நைஜீரியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தேர்தல் பார்வையாளராகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரோஹினி மாரசிங்கவும் அடுத்த வாரம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை ஜோசப் சம்பரையும் சந்திக்க உள்ளார்.

தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனுபவத்தை ஆராய்ந்து அவ்வாறான மாதிரியை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *