போரினால் காயமடைந்த 500 க்கும் மேற்பட்டவர்களை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பும் தனவந்தர்!

போரினால் காயமடைந்த சுமார் 500 க்கும் அதிகமான சிரியா நாட்டவர்களை இம்முறையும் புனித ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைத்துள்ளார் இளவரசர் அப்துல் அஸீஸ்.

சிரியாவின் வடக்கு பகுதியில் “அபு துர்கி”என்று அழைக்கப்படும் மறைந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸ் அல் சவுதி இன் மகன் இளவரசர் அப்துல் அஸீஸ் என்பவரே தொடர்ந்து இரண்டாவது வருடமாக சுமார் 500 க்கும் அதிகமான சிரியா நாட்டவர்களை இம்முறையும் புனித ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த யாத்திரீகர்களின் பயணம், தங்குமிட செலவுகள், அத்துடன் பயண ஆவணங்கள், மற்றும் ஹஜ் ஏற்பு ஆவணங்களை ஒருங்கமைத்தல் போன்ற அத்தனை செயற்பாடுகளும் குறித்த இளவரசரின் நிதி மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“நான் என் கால்களை இழந்தேன், ஆனால் அல்லாஹ் தனது புனிதமான வீட்டைப் பார்வையிடும் வாய்ப்பை எனக்குக் கொடுத்தான்” என்று சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகிலுள்ள அட்மே முகாமில் வசிக்கும் எட்டு குழந்தைகளின் தந்தையான இஸ்மாயில் அல்-மஸ்ரி கூறியுள்ளார்.

ஹஜ்ஜுக்கு செல்வது எனது கனவுகளில் ஒன்று. போர் காயங்களுடன் இருந்த நான் ஹஜ்ஜுக்கு செல்லும் நபர்களின் மானியப்பட்டியலில் உள்வாங்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டவுடன்தான் எனக்கு உயிரே வந்தது போன்று இருந்தது என்று அல்-மஸ்ரி என்ற நபர் கூறியுள்ளார்.

இந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் மகிழ்ச்சியை கொண்டு வரும் இளவரசர் அப்துல் அஸீஸ் தன்னுடைய அடையாளத்தை மறைத்தே பல வருடங்களாக வாழ்ந்து வந்தார்.

ஆனால் கடந்த முறை இதே போன்று ஹஜ்ஜுக்கு மக்களை தனது செலவில் அனுப்பும் பொழுதே அவர் தனது உண்மை முகத்தை மக்களுக்கு காட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *