அதிகளவில் டார்க் சொக்லேட்டுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு

அதிக கொக்கோ கொண்ட டார்க் சொக்லேட்டுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தாதுக்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. மேலும் இவை நமது இதய ஆரோக்கியத்திற்குமிகவும் நல்லது.

ஆனால் இதை அதிக அளவில் சாப்பிடும் போது அதிகமான அளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் நம் உடலில் சேர வாய்ப்பு இருக்கிறது.

தரமான டார்க் சொக்லேட்டில் நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ் மற்றும் சில தாதுக்கள் நிறைந்துள்ளன.

கோகோ மற்றும் டார்க் சாக்லேட்டுகளில் பலவிதமான சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மூலப் பொருட்களை கொண்டிருக்கின்றன. இவை மற்ற உணவுகளை விட டார்க் சாக்லேட்டில் அதிகமாக உள்ளது.

கோகோவில் உள்ள பயோஆக்டிவ் கலவைகள் உடலின் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தினை சீராக்க உதவுகின்றன. மேலும் இவை இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *