கடன் நெருக்கடி தீர்வு குறித்து விசேட கலந்துரையாடல்!

உலக இறையாண்மைக் கடன் தொடர்பான வட்டமேசைக் கலந்துரையாடல் இலங்கை உட்பட அதிக கடனில் உள்ள நாடுகளின் கடன் மறுசீரமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய உதவும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.

இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி சமச்சீர் கடன் நிவாரணம் வழங்குவது தொடர்பான செயலமர்வு நடைபெற உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான வட்டமேசை கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இதில் ஜி 20 குழுவின் தற்போதைய தலைவரான இந்தியா, பாரிஸ் கிளப், சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் சீனாவின் அதிகாரப்பூர்வ கடன் வழங்கும் நாடுகளின் தலைவர் பதவியை வகிக்கும் பிரான்ஸ் பங்கேற்க உள்ளது.

இதன்போது கடன் நெருக்கடிகளைத் தீர்ப்பது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்கும் நாடுகளின் பிரதிநிதிகளின் மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கொசாக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வருடம் மே மாதத்தில் 83,309 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மே 2022 உடன் ஒப்பிடும்போது இது 175.8 வீத வளர்ச்சியாகும். இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 524,486 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *