அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டுத்திட்டம்!

அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு 9 வீட்டுத்திட்டங்களை விரைவாக நிர்மாணிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கான அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு இந்த வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ், இலங்கையிலுள்ள ஒப்பந்த நிறுவனங்களினால் இந்த வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே 10,430.84 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, வீட்டுத் திட்டங்களின் கட்டுமானப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *