மாணவி கொலை சந்தேக நபர் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!

விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில், அவரது தொலைபேசி தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. மேலும், உயிரிழந்த மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசி தொடர்பான விசாரணையின் போது, ​​விடுதிக்குச் சென்ற மற்றைய தம்பதிகள் தொலைபேசியை களு கங்கையில் வீசியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறித்த தம்பதியினரும் பிரதான சந்தேகநபரும் தப்பிச்செல்ல உதவிய காரின் சாரதி மே 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் களுத்துறை இசுரு உயன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, களுத்துறை நாகொட பாடசாலையில் கல்வி பயின்ற குறித்த மாணவியின் சடலம் சமய சடங்குகளுடன் நேற்று மாலை களுத்துறை, அடவில பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *