இங்கிலாந்தின் 40 ஆவது மன்னராக சார்ல்ஸ் முடிசூட்டிக் கொண்டார்

இங்கிலாந்தின 40வது மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் சார்லஸ் முடிசூட்டிக்கொண்டுள்ளார்.

சார்லஸ் முடிசூட்டிக்கொண்டுள்ளார்
1066 முதல் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து தான் இங்கிலாந்தின் மன்னர் அல்லது ராணியாருக்கு முடிசூட்டப்பட்டு வருகிறது. கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி செயின்ட் எட்வர்ட் மகுடத்தை சார்லஸ் மன்னரின் தலையில் வைத்து ஆசீர்வதித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல கோடி பேர்கள் நேரலையாக பார்க்கப்பட்ட வரலாற்று தருணம், மட்டுமின்றி நீண்ட 70 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த இரண்டான் எலிசபெத் ராணியார் கடந்த செப்டம்பரில் காலமானதை அடுத்து, அந்த பொறுப்புக்கு சார்லஸ் வந்துள்ளார்.

முடிசூட்டு விழாவில் இளவரசர் வில்லியம் குடும்பம் மற்றும் ஹரி உட்பட மொத்த ராஜ குடும்பமும் பங்கேற்றுள்ளது. இந்த விழாவில் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் மட்டும் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அவரது பிள்ளைகளுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை.

மன்னருக்கு விசுவாசமாக இருப்பேன்
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த சடங்குகளுக்கு பின்னர் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டுள்ளது. முடிசூட்டப்படுவதற்கு முன்னர், பேராயர் ஜஸ்டின் வெல்பி திரண்டிருந்த 2,300 சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரசங்கம் மேற்கொண்டார்.

இந்த விழாவில் மன்னர் சார்லஸ் மட்டுமின்றி ராணியார் கமிலாவுக்கும் முடிசூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பாரம்பரியத்தை முறித்து இளவரசர் வில்லியம் மரியாதை செலுத்தியுள்ளார்.

மட்டுமின்றி மன்னருக்கு விசுவாசமாக இருப்பேன் எனவும் வில்லியன் உறுதிமொழி செய்துள்ளார். பொதுவாக இரத்த வாரிசு மட்டுமே அவ்வாறு செய்ய வேண்டும் என்ற நிலையில், முதன் முறையாக இளவரசர் அவ்வாறு மரியாதை செலுத்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *