தீ விபத்தில் சிக்கி 18 ஆயிரம் பசு மாடுகள் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18,000க்கும் மேற்பட்ட பசு மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த மாட்டு பண்ணை டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய பால் உற்பத்தி பண்ணையாக கருதப்படுகிறது.

மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில் இந்த விபத்தில் மனித உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் பல கிலோமீட்டர் தொலைவில் வானத்தில் கரும் புகை கிளம்பியது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்த ஒருவர் காயமடைந்த நிலையில், காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். Also Read – இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் இதற்கிடையில், சில அமெரிக்க செய்தி நிறுவனங்கள் இந்த விபத்து இதுவரை இல்லாதா மிகப்பெரிய விபத்து என்றும் இதனால் பேரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சுமார் 6.5 மில்லியன் பண்ணை விலங்குகள் இதுபோன்ற தீயில் உயிரிழந்துள்ளன, அவற்றில் பெரும்பாலானவை கோழிகள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *