பசுவின் சிறுநீரை குடிப்பது உடல் நலத்திற்கு கேடு ஆய்வில் தகவல்!

வட இந்தியா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலர் பசுவின் சிறுநீரை குடிக்கும் வழக்கம் கொண்டுள்ளனர். மத சடங்கு முறை மற்றும் மூடநம்பிக்கையின் பெயரில் சிலர் பசுவின் சிறுநீரை குடிக்கின்றனர். பசுவின் சிறுநீர் உடலுக்கு நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், பசு, எருமை மாடுகளின் சிறுநீரை குடிப்பது மனிதர்களுக்கு தீக்கு விளைவிக்கும் என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பெரெலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பசு, எருமை மாட்டின் சிறுநீரை மனிதர்கள் குடிப்பதால் உடலுக்கு தீக்கு ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.

உடல்நலம் மிக்க பசு மற்றும் எருமை மாட்டின் சிறுநீரில் நடத்தப்பட்ட ஆய்வில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் பசு மற்றும் எருமை மாட்டில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. Also Read – நடத்தையில் சந்தேகம்: 65 வயது மனைவி மீது ஆசிட் வீசிய 75 வயது முதியவர் – அதிர்ச்சி சம்பவம் இந்த பாக்டீரியாக்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவித்து குடல், வயிறு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக பசு மாட்டின் சிறுநீரை விட எருமை மாட்டின் சிறுநீரில் மனித உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு எந்த வகையிலும் சிறுநீரை மனிதர்கள் குடிக்க பரிந்துரைக்கப்படவில்லை என்று அந்த் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பசு, எருமை மாட்டின் சிறுநீர்கள் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *