சிறுவனிடம் தனது நாக்கை உறிஞ்சக் கேட்டு சர்ச்சையில் சிக்கிய தலாய் லாமா!

புத்த மதத் தலைவரான தலாய் லாமா, சிறுவன் ஒருவனுக்கு வாயில் முத்தம் கொடுத்ததுடன், சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி கூறியதாக, ‘வீடியோ’ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் தஞ்சமடைந்துள்ளார். சமூக வலைதளத்தில் இவர் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஒரு சிறுவனுக்கு முத்தம் தருவதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.. அந்த சிறுவன் தலாய் லாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான். அப்போது அந்த சிறுவனின் வாயில் தலாய் லாமா முத்தம் கொடுக்கிறார். தன்னுடைய நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி தலாய் லாமா சொல்கிறார். இந்த காட்சி அப்படியே அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதில், தன் காலில் விழுந்த ஒரு சிறுவனின் வாயில் அவர் முத்தம் கொடுக்கிறார்.

மேலும், தன் நாக்கை நீட்டி சிறுவனின் நாக்கால் தன் நாக்கைத் தொடும்படி அவர் கூறுவது, அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அதாவது, “என் நாக்கை நீ முத்தமிட முடியுமா” என்று அந்த சிறுவனிடம் தலாய் லாமா கேட்கிறார். இதை பார்த்த பலரும் கொந்தளித்து போயுள்ளனர். இதெல்லாம் அருவருப்பானது, கேவலமானது, கண்டனத்திற்குரியது, ஒரு ஆன்மீதக தலைவர் செய்யக்கூடிய வேலையா? இதெல்லாம் என்றெல்லாம் கண்டனங்கள் உலகம் முழுவதிலும் இருந்து குவிந்து கொண்டிருக்கிறது. ட்விட்டரில் இந்த வீடியோவை ஜூஸ்ட் ப்ரோக்கர்ஸ் என்பவர் ஷேர் செய்திருக்கிறார்.

அத்துடன், “தலாய் லாமா ஒரு புத்த நிகழ்வில் ஒரு இந்திய சிறுவனை முத்தமிடுகிறார். மேலும் அவரது நாக்கை தொடவும் முயற்சிக்கிறார். அவர் உண்மையில் “என் நாக்கை தொடு” என்று சொல்கிறார். இப்போது அவர் அதை ஏன் செய்வார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.. “இது பொருத்தமற்றது, இந்த தவறான நடத்தையை யாரும் நியாயப்படுத்தக்கூடாது தலாய் லாமா” என்று இன்னொரு ட்விட்டர் பயனாளி தீபிகா புஷ்கர் நாத் எழுதினார்.

அதேபோல, ஜாஸ் ஓபராய் என்பவர், “நான் என்ன பார்க்கிறேன்? இது தலாய் லாமா தானா? குழந்தைகள் மீது காம இச்சை காட்டும் அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இது மிகவும் அருவருப்பானது” என்று காட்டமாக கூறியுள்ளார்.

தலாய் லாமா செய்தது அத்துமீறல் என்று பலரும் சொல்லிவர, தலாய் லாமா விளையாட்டாகவே சிறுவனுக்கு முத்தமிட்டார் என்று ஆதரவு தந்துவருகிறார்கள் மேலும் பலர்.

கடந்த 2019ல், இப்படிதான் ஒரு சர்ச்சையில் சிக்கினார் தலாய் லாமா.. பெண் தலாய்லாமா பற்றி சொன்னபோது, “என்னுடைய பொறுப்புக்கு ஒரு பெண் வருவதெனில் அவர் அதிக கவர்ச்சியாக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றும் புத்த மதத்தின் தலைவராக இருக்கும் தலாய் லாமா இப்படி பேசலாமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. புத்த மதத்தில் அறிவை போன்று அழகுக்கும் போதிய அளவு முக்கியத்துவம் இருப்பதாக தலாய் லாமா இதற்கு காரணம் கூறி சமாளித்தாலும், கண்டனங்கள் நிறைய வலுத்ததால் தான் பேசியதற்கு அப்போது தலாய்லாமா மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்க, தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் குறித்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு ட்விட்டர் பதிவொன்று இடப்பட்டுள்ளது.

“சமீபத்தில் ஒரு சிறுவன் தனது புனித தலாய் லாமாவிடம் அவரை கட்டிப்பிடிக்க முடியுமா என்று கேட்டதைக் காட்டும் வீடியோ கிளிப் ஒன்று பரவி வருகிறது.

அவரது வார்த்தைகள் ஏற்படுத்திய காயத்திற்காக சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினரிடமும், உலகெங்கிலும் உள்ள அவனது பல நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். “அவர் நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறார்.

அவரது புனிதத்தன்மை, பொது மற்றும் கேமராக்களுக்கு முன்னால் கூட, அப்பாவி மற்றும் விளையாட்டுத்தனமான முறையில் சந்திக்கும் நபர்களை கேலி செய்கிறார்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *