இரண்டு வருடங்களுக்குப் பிறகு காபியின் மணத்தை உணர்ந்த கொரோனா நோயாளி!

அமெரிக்காவில் 2 வருடங்களாக கொரோனா நோயால் பாதிக்கபட்டு வந்த பெண்மணி, நோயிலிருந்து மீண்டதும் காபியின் வாசத்தை உணரும் போது, கண் கலங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

2 வருடமாக கொரோனா தொற்று
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல உயிரிழப்பை ஏற்படுத்தியது.

தற்போது அதன் வீச்சு குறைந்திருந்தாலும் கூட இன்னும் சில நாடுகளில் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களில் பலர் நரம்பு பிரச்சனைகள், சுகை நுகர்வு தன்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த 54 வயதான ஜெனிபர் ஹெண்டர்சன் என்ற பெண்மணி கடந்த ஜனவரி 2021-ஆம் ஆண்டு தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தலைவலி, உடல் சோர்வு போன்ற தொற்று ஒரு வாரத்தில் சரியானாலும் சுவை உணர்வு பாதிக்கப்பட்டுள்ளது.

சுவாச பிரச்சனை

அவரால் எந்த ஒரு வாசத்தையும் உணர முடியாமல் இருந்ததால், உணவு பொருட்களை கூட வெறுக்க துவங்கியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த டிசம்பரில் Stellate ganglion block (SGB) எனப்படும் சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்தார்.

இம்முறையில் அவரது கழுத்தின் இருபுறமும் நரம்புகளில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பயனாக அவரது வாசனை உணர்வு பிரச்சினை படிப்படியாக சரியானது. இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு அவரால் சாதாரணமாக காபி வாசனையை உணர முடிந்துள்ளது.

ஜெனிபர் காபி வாசனையை மீண்டும் உணர்ந்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் டிக்-டாக் வலைத்தளத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *