உக்ரைன் குழந்தைகளுக்காக 250000 யூரோக்கள் திரட்டிய 13 வயது சிறுவன்!

உக்ரேனிய குழந்தைகளுக்காக 250,000 யூரோக்கள் திரட்டியதற்காக வைரலான 13 வயது சிறுவன் கிழக்கு ஆபிரிக்காவின் குழந்தைகளுக்கு உதவ புதிய நிதி திரட்டலை தொடங்கியுள்ளார்.

9 கோடி திரட்டிய பிரித்தானிய சிறுவன்
கேப்ரியல் கிளார்க் (Gabriel Clark) எனும் 13 வயது சிறுவன் கடந்த ஆண்டு “Bowl for Ukraine” என்ற பெயரில் எடுத்த முன்முயற்சி மூலம் இணையத்தில் பரபரப்பானார்.

இந்த முயற்சியின் கீழ், கிளார்க் ஒரு மரக் கிண்ணத்தை செதுக்கி, அதில் உக்ரேனியக் கொடியின் வண்ணங்கள் பொறித்தார். கிளார்க் இந்த கிண்ணங்களை ஏலத்தில் விட்டார்.

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் குழந்தைகளுக்காக 250,000 யூரோக்கள் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய்) திரட்டினார்.

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கும்ப்ரியா என்ற நகரத்தில் வசிக்கும் சிறுவன் இந்த ஆண்டு அதே சாதனையை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த ஆண்டு, ‘The Hope Bowl’ என்ற மற்றொரு கிண்ணத்தை உருவாக்க முடிவு செய்தார்.

சிறுவனின் புதிய முயற்சியின் மூலம் உலகம் முழுவதும், குறிப்பாக கிழக்கு ஆபிரிக்காவில் போராடி வரும் குழந்தைகளுக்கு ஆதரவாக குழந்தைகளுக்கான அவசர நிதியத்திற்காக பணத்தை திரட்ட கிளார்க் திட்டமிட்டுள்ளார். கிளார்க் இந்த புதிய கிண்ணத்தை உருவாக்க 10 மணிநேரத்தை எடுத்துக்கொண்டார்.

உக்ரைன் குழந்தைகளுக்கு உதவிய பணம்
கிளார்க் தனது கடைசி நிதி திரட்டலின் வெற்றியாலும், போலந்தில் உள்ள ஒரு பாடசாலையில் உள்ள குழந்தைகளுக்கு இது எவ்வாறு உதவியது என்பதாலும் இந்த முயற்சியை எடுக்க தூண்டப்பட்டார்.

போலந்து பாடசாலை உக்ரைனிலிருந்து 6 முதல் 17 வயதிற்குட்பட்ட 450-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளித்தது மற்றும் போலந்து மொழி பாடங்களுடன் உக்ரேனிய பாடத்திட்டத்தை அவர்களின் சொந்த மொழியில் படிக்க அவர்களுக்கு உதவியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *