218 நாட்களில் புத்தகத்தை வெளியிட்டு கின்னஸ் சாதனைப் படைத்த 4 வயது சிறுவன்!

சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

அபுதாபியை சேர்ந்த சயீத் ரஷீத் அல்மெய்ரி என்ற சிறுவன் தனது 4 வயதில் 218 நாட்களில் புத்தகத்தை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

உலகில் மிக இளம் வயதில் புத்தகத்தை வெளியிட்ட இளம் தனி நபர் (ஆண்) என்ற பிரிவில் அந்த சிறுவன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி குழந்தைகள் விரும்பிப் படிக்கக் கூடிய எலிஃபண்ட் சயீத் மற்றும் கரடியும் என்ற புத்தகத்தை சிறுவன் சயீத் ரஷீத் வெளியிட்டுள்ளார்.

இந்த புத்தகம் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் இரக்கம் மற்றும் இரு விலங்குகளிடையே எதிர்பாராத நட்பு பற்றிய கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை எழுதி கின்னஸ் சாதனையில் இடம்பெற சயீத்துக்கு அவரது மூத்த சகோதரி அல்தாபி பக்கபலமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து சயீத் ரஷீத் தெரிவிக்கையில் ,

என் சகோதரியை நான் மிகவும் நேசிக்கிறேன். அவளுடன் விளையாடுவதை எப்போதும் ரசிக்கிறேன். நாங்கள் எப்போதும் ஒன்றாகவே படிக்கிறோம், எழுதுகிறோம், வரைகிறோம்.

மேலும் பல செயல்களை ஒன்றாகவே செய்கிறோம். அவளால் ஈர்க்கப்பட்டுதான் நான் இந்த புத்தகத்தை எழுதினேன் என்று உலக கின்னஸ் சாதனை அமைப்பிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *