திருமணத்தை நிராகரிக்கும் இளைஞர்கள்

சீனாவில் வாழும் இளைஞர்கள் திருமணத்தை நிராகரிப்பதாக தெரியவந்துள்ளது.

திருமணத்தை நிராகரிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

குடும்பச் செலவுகள் அதிகரிப்பதாலும் விவாகரத்து செய்வது கடினமாகிவிட்டதாலும் பலர் முதல் திருமணம் செய்துகொள்ள விருப்பப்படவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் திருமணம் செய்தோரின் எண்ணிக்கை 11.6 மில்லியன் எனப் பதிவானது.

அது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 700,000 குறைவாகும். ஆகையால் சீனாவில் பிறப்பு விகிதமும் விவாகரத்து விகிதமும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவாகரத்தை நாடும் ஒருவர் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர் 30 நாட்கள் காத்திருக்கவேண்டும் என ஒருவர் ஆதங்கத்துடன் கூறினார்.

திருமணம் செய்வது நரகத்துக்குப் போவதற்குச் சமம். சிலர் சமர்ப்பித்த விவாகரத்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆகையால் தொடர்ந்து ஏமாற்றத்தையும் குடும்ப வன்முறையையும் அனுபவிக்க வேண்டியுள்ளது, என ஒருவர் கூறியிருந்தார்.

பெற்றோர் பிள்ளைகளைத் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியும் இளையர்கள் தனித்து வாழவே விரும்புவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *