பிரபல கவர்ச்சிப் பத்திரிகையின் அட்டையில் பெண் அமைச்சரின் படத்தால் சர்ச்சை!

பிரபல கவர்ச்சிப் பத்திரிகையின் அட்டையில் பிரான்ஸ் பெண் அமைச்சரின் படத்தால் சர்ச்சை!

பிரான்ஸ் பெண் அமைச்சர் ஒருவர், பிரபல ஆண்கள் பத்திரிகை ஒன்றிற்கு போஸ் கொடுத்த விவகாரம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பிளேபாய் பத்திரிகைக்கு போஸ்
பிரான்ஸ் சமூகப் பொருளாதாரம் மற்றும் பிரெஞ்சு கூட்டமைப்புகளுக்கான அமைச்சரான மார்லீன் ஷியப்பா (Marlene Schiappa), பிளேபாய் பத்திரிகையின் அட்டைப்படத்துக்குக்காக போஸ் கொடுத்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் ( Élisabeth Borne) உட்பட பலர் மார்லீன் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

யார் இந்த மார்லீன் ஷியப்பா?

மார்லீன் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் மற்றும் முதல் பாலின சமத்துவ அமைச்சர் ஆவார். தெருக்களில் ஆண்கள் பெண்களைப் பார்த்து விசிலடித்தாலோ, வார்த்தைகளால் துன்புறுத்தினாலோ உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தவர் ஆவார். இப்போது அவரே ஆண்கள் பத்திரிகை ஒன்றிற்கு போஸ் கொடுத்ததால் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

பிரதமர் விமர்சனம்

பிரான்ஸ் பிரதமரான எலிசபெத், மார்லீனுடைய செயல் முறையற்றது, அதுவும் இப்போதிருக்கும் சூழலில் என்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது நாட்டில் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதைக் குறித்தாகும்.

பிரான்ஸ் அரசியல்வாதியான Jean Luc Mélenchonம், மார்லீனை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி குழந்தைகளுக்கான பத்திரிகைகளில் பேசுகிறார்.

அவரது அமைச்சர் மார்லீனோ பிளேபாய் பத்திரிகையில் பேசுகிறார். இது ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *