வானில் அதிசய நிகழ்வு ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள் கண்டு ரசித்த மக்கள்.!

 

வியாழன், புதன், வீனஸ், யுரேனஸ் மற்றும் செவ்வாய் ஆகிய 5 கிரகங்கள் இரவு வானத்தில் தோன்றிய அதிசய நிகழ்வு நடைபெற்றது. புதுடெல்லி, வானவியல் நிகழ்வுகளில் அவ்வப்போது சூரிய குடும்பத்தின் கோள்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அதிசய நிகழ்வுகள் நடைபெறும்.

கடந்த ஆண்டில் செவ்வாய், வியாழன், சனி, புதன்,நெப்டியூன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடந்தது.

அதேபோல் வானத்தில் பிரகாசமான கிரகங்களான வெள்ளி மற்றும் வியாழன், கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒவ்வொரு நாளும் ஒன்றையொன்று நெருங்கி வந்தனர்.

அதேபோன்று இந்த மாதம் இன்று செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கோள்கள் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற்றது. உலகின் பல்வேறு இடங்களில் தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஒரு சில இடங்களில் பொதுமக்கள் வெறும் கண்களில் தென்பட்டதாக கூறப்படுகிறது.

வியாழன், புதன், வீனஸ், யுரேனஸ் மற்றும் செவ்வாய் (Jupiter, Mercury, Venus, Uranus and Mars) ஆகிய 5 கிரகங்கள் இரவு வானத்தில் தோன்றிய ஆச்சரிய நிகழ்வு விண்வெளியில் நடைபெற்றது. அவை பார்ப்பதற்கு ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் இருக்கும் என்றாலும் அவை உண்மையில் கிரக அமைப்பில் நேர்கோட்டில் இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேர்கோட்டில் தெரியும் இந்த 5 கோள்களும் பூமியில் இருந்து பார்த்தால் கிட்டதட்ட ஒரு வில் வடிவத்தில் தெரியும். ஒரே நேர்கோட்டில் தெரியும் இந்த 5 கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தெரிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து தொலைநோக்கி வழியாக பார்க்கலாம் எனவும் இவை பார்ப்பதற்கும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல் இருந்தாலும் கிரக அமைப்பில் நேர்கோட்டில் இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *