அரிய புதுவகை மலர் கண்டுபிடிப்பு!

 

ஒரு புதிய வகை ஆர்க்கிட் மலரைக் ஜப்பானிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்ணாடி போன்ற மெலிந்த இதழ்களுடன் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில் இருக்கும் குறித்த புதிய வகை மலரை பொதுவான இடத்திலே கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

Kobe பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் 10 ஆண்டுக்குப் பிறகே Spiranthes Hachijoensis என்றழைக்கப்படும் அந்த மலரின் அடையாளத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த புதிய வகை ஆர்க்கிட் மலரும் போது பார்ப்பதற்குக் கண்ணாடியாளான கலைப்பொருளைப் போன்று இருக்கும் என பல்கலைக்கழகம் செய்தியறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.அது மத்திரமின்றி ஜப்பானில் 8ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட பழமையான கவிதைகளிலும் அந்த மலரைப் பற்றிக் கூறப்பட்டது.

தோக்கியோவின் ஹச்சிஜோஜிமா தீவில் அவை காணப்படுவதால் அந்த Spiranthes வகை மலர் ஹச்சிஜோன்சிஸ் என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *