ஊழியர்களுக்கு 5 வருட சம்பளத்தை போனஸாக வழங்கும் நிறுவனம்!

தைவான் கப்பல் போக்குவரத்து நிறுவனமான எவர்கிரீன் தனது 3100 ஊழியர்களுக்கு பாரிய போனஸ்களை வழங்கியுள்ளது.

எவர்கிரீன் மரைன், 2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில்  தலைப்புச் செய்திகளை கொண்டிருந்தது, அந்த காலப்பகுதியில் குறித்த நிறுவனத்தால் இயக்கப்பட்ட ஒரு கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டது.

கடந்த டிசம்பரில் வழங்கப்பட்ட மிகப்பெரிய 50 மாத போனஸுடன் சேர்த்து, தொழிலாளர்கள் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கான ஊதியத்தை போனஸாக பெறுகிறார்கள் என்று மீடியா போர்டல் தெரிவித்துள்ளது.

எவர்கிரீன் தொழிலாளர்களின் தனிப்பட்ட செயல்திறனுக்கு ஏற்ப போனஸ் விநியோகிக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனம் 94 மில்லியன் டொலர்களை செலவழிக்கிறது, தொழிலாளர்களுக்கு மத்திய ஆண்டு போனஸ் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவர்கிரீனில் ஆண்டு சம்பளம் 29, 545 மற்றும் 114,823 டொலர் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்த வாரம் டிசம்பர் 31, 2022 இல் முடிவடைந்த அதன் நிதியாண்டில் NT$334.2 பில்லியன் (S$14.7 பில்லியன்) நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 39.82 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *