Uncategorized

இரண்டு நாட்களில் இலங்கைக்கு நிதி கிடைக்கும் என அறிவிப்பு!

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தற்போது இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (EFF) பற்றிய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றனர்.

இதற்கமைய இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் நிதி உதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறவுள்ளது. இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை முதல் தவணை பணமாக பெறும்.

48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு குறித்த தொகை வழங்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading