காலையில் குழி தோண்டிய நபர் மாலையில் அதே குழியில் அடக்கம் செய்யப்பட்ட பரிதாபம்!

 

காலையில் குழி தோண்டும் போது அவருக்கு தெரியாது இந்த குழியில் தன்னுடைய உடல் அடக்கம் செய்யப்படும் என்பது….

பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் அருகில் உள்ளது பழைய லெகிடி ஜமாஅத்..
அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் செய்யும் சமூக பணிகளில் கப்று தோண்டுவதும் ஒன்று..இடைப்பட்ட நாட்களில் ஊரில் யாராவது மரணித்தால் அடக்கம் செய்ய வசதியாக கப்று தோண்டி தயாராக வைப்பது வழக்கம்..

அதுபோல நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் கப்று தோண்டும் பணியில் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம் எம் நிசாத் என்பவரும் இணைந்து பணியாற்றினார். அபுதாபியில் பணியாற்றி வந்த நிசாத் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளவர் இளைஞர்களின் பணிகளை ஊக்குவிப்பவர்.

கப்று தோண்டும் பணி பூர்த்தி செய்து இல்லம் திரும்பிய நிசாத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வஃபாத் ஆன சோகம்.. காலையில் நிசாத் தோண்டிய கபுறிலேயே மாலை அவரது ஜனாசாவை அடக்கம் செய்ய வெண்டி வந்ததை அடுத்து ஊர் மக்களுக்கு தாங்கொணா துயரம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *