வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடலாமா?

 

காலை எழுந்ததும் எந்த வேலை செய்கிறோமோ இல்லையோ டீ, காபி குடிக்க மறப்பதேயில்லை. அவ்வாறு டீ, காபி குடிக்கும்போதே பிஸ்கட்டுகள் சாப்பிடுவது பலருக்கு பழக்கமாக உள்ளது. தினம்தோறும் காலை எழுந்ததுமே பிஸ்கட் சாப்பிடுவது உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அது குறித்து தெரிந்து கொள்வோம்..!

காலை எழுந்ததுமே டீ அல்லது காபியோடு பிஸ்கட் சாப்பிடுவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் காலையிலேயே சாப்பிடும் பிஸ்கட் செரிமான பிரச்சினையை உண்டாக்கும்.

பிஸ்கட்டுகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவின் உயர் கிளைசெமிக் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும்.

உப்பு சேர்க்கப்பட்ட குக்கீகள் உங்கள் இரத்த அழுத்த அளவை உயர்த்தும் திறன் கொண்டவை.

வெண்ணெய் சேர்க்கப்பட்ட பட்டர் பிஸ்கட்டுகள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்.

பச்சை மாவு பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் குக்கீகள் உணவு ஒவ்வாமை (Food Poison) ஏற்படுத்தலாம்.

செயற்கை சுவையூட்டிகள் நிறைந்த பிஸ்கட்டுகள் உடலில் கலோரிகளை அதிகப்படுத்துவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

காலையிலேயே எழுந்ததும் தண்ணீர் குடித்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து எதையும் சாப்பிடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *