மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கொடுக்காததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

திருமணம் என்றவுடன் அங்கே பெரிய பிரச்சினையாக வந்து நிற்பது வரதட்சனை தான்.

திருமணம் நிச்சயிக்கப்படும் போதே பெண்வீட்டார் பெண்ணுக்கு இவ்வளவு நகைகள் போடவேண்டும். சீர்வரிசை இவ்வளவு வேண்டும். மாப்பிள்ளைக்கு மோதிரம், வாகனம் வாங்கித் தரவேண்டும் என ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள்.

ஆனால், அதற்கு எதிர்மாறாக மாப்பிள்ளை வீட்டார் வரதட்சனை கொடுக்காததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவமொன்று நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் போச்சாரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும் அஸ்வரா பேட்டை பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பழங்குடியின வழக்கப்படி மணமகன் வீட்டார் தான் மணமகளுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் என்பதால், மணமகன் வீட்டார் ரூ.2 லட்சத்தை வரதட்சனையாக மணமகளுக்கு கொடுத்துள்ளனர்.

திருமண ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்துள்ளது. முகூர்த்த நேரம் வந்தவுடன் மணமகன் மணமேடைக்கு வந்துள்ளார். ஆனால், மணமகள் வீட்டார் மண்டபத்துக்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் சென்று விசாரிக்கையில் கூடுதலாக வரதட்சனை கொடுத்தால் மாத்திரமே தான் திருமண மண்டபத்துக்கு வருவேன் என்று மணமகள் பிடிவாதமாக கூறியுள்ளார். எவ்வளவோ முயற்சித்தும் மணமகள் மனம் இறங்கவில்லை.

அதனால் திருமணம் நின்றது. மண்டபமே சோகத்தில் மூழ்கியது. மணமகன் இதுகுறித்து காவல் துறையில் முறைப்பாடு செய்ய, காவல் துறையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை.

அதனால் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் தாங்களாகவே திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர். பின்னர் மணமகளுக்கு வரதட்சணையாக கொடுத்த ரூ.2 லட்சத்தை திரும்ப பெற்றுக்கொண்டு மணமகன் வீட்டார் திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *