தனது 5 பிள்ளைகள் தன்னைப் பார்க்காததால் சொத்தை அரசுக்கு எழுதி வைத்த முதியவர்!

உத்தர பிரதேசத்தில் 85 வயது முதியவர் தனது பிள்ளைகள் தன்னை பார்க்காததால் அரசுக்கு தனது சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டம், பதானா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நது சிங்(85). நது சிங்கின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

இவர்களுக்கு நான்கு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவரின் ஒரு மகன் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

மனைவி இறப்பிற்கு பின்பு தனியாக வாழ்ந்து வந்த நது சிங், தன்னுடைய பிள்ளைகள் யாரும் பார்க்காததால் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ந்துள்ளார்.

முதியோர் இல்லத்திற்கு சென்றும், அவரது பிள்ளைகள் யாரும் வந்து பார்க்காததால், கோபமடைந்த நது சிங், உத்தர பிரதேச அரசுக்கு தனது சொத்துக்கள் முழுவதையும் எழுதி வைத்துள்ளார்.

முதியவர் எழுதிய உயில்
நது சிங் தனது உயிலில், தனது மறைவிற்கு பின்பு தனது வீடு மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய நிலமும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இதில் பள்ளிக்கூடம் இல்லது மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும், தனது இறப்புக்கு பின்பு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, தனது இறப்புக்கு பின்பு இறுதி சடங்குக்கு எனது பிள்ளைகள் யாரும் வரக்கூடாது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய சார் பதிவாளர், நது சிங் சொத்துக்கள் அவரது மறைவுக்கு பின் மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *