ஐ.நாவில் கைலாசா நாட்டின் கோரிக்கை நிராகரிப்பு!

கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிடதியில் ஆசிரமம் அமைத்த நித்தியானந்தாவிற்கு கர்நாடகாவில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். இவர் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவான பலாத்கார வழக்குகளில் இருந்து தப்பிய நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி கொண்டு அதற்கு கைலாசா என்று பெயரிட்டு கொண்டு அங்கு வாழ்கிறார். ஆனால் அந்த நாட்டின் சரியான இடம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில் பிப்ரவரி 22ம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19 வது மாநாட்டின் 73 வது கூட்டம் நடைபெற்றது.

இதில் கைலாசா நாட்டின் அமெரிக்காவின் பிரதிநிதியாக மா.விஜயபிரியா நித்யானந்தா கலந்து கொண்டார். அங்கு பேசும் போது அவர் நித்யானந்தா தனது தாய்நாட்டால் வேட்டையாடப்படுவதாக குற்றம் சாட்டினார். Also Read – மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் தனது அறிக்கை “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, வேண்டுமென்றே திரிக்கபட்டு உள்ளது என்றும் ஊடகங்களின் சில இந்து எதிர்ப்பு பிரிவுகளால் சிதைக்கப்படுகிறது” என்று விஜயபிரியா நித்தியானந்தா கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது பகவன் நித்யானந்தா பரமசிவம் தனது தாய்நாட்டில் சில இந்து எதிர்ப்பு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகிறார் என்று நான் கூறினேன் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா கைலாசா இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை அளிக்கிறது மற்றும் இந்தியாவை அதன் குருபீடமாக மதிக்கிறது. எங்கள் கவலை அந்த இந்து எதிர்ப்பு ஒரு விஷயத்தை நோக்கி மட்டுமே வழிநடத்தப்படுகிறது. இந்து மதம் மற்றும் கைலாசாவின் மிகச்சிறந்த தலைவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் இத்தகைய அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறி உள்ளார்.

இந்த நிலையில், ஐ.நா கூட்டத்தில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்து முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய ஐ.நா சபை கூறும் போது பொது விவாதங்கள் என்பது, நேரில் பங்கேற்க மற்றும்/அல்லது எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை வழங்க ஆர்வமுள்ள எவருக்கும் திறந்திருக்கும் பொதுக் கூட்டம் ஆகும். ஒரு பொது விவாதத்தின் நோக்கம், அந்தந்த குழுக்களின் சுயாதீன நிபுணர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்கவும் அனுமதிப்பதாகும். ஒரு பொதுக் கருத்தின் வரைவு, இது குறிப்பிட்ட பிரச்சினைகள் அல்லது கருப்பொருள்கள் மீதான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் அரசுகளுக்கு உதவுவதற்கான வழிகாட்டியாகும். பெப்ரவரி மாதம் நடந்த ஐ.நா சபைக் கூட்டத்தில் கைலாசாவில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்கள் கூட்டத்திற்குத் தொடர்பில்லாத கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனால் இவர்கள் பேசிய கருத்துக்களை ஐக்கிய நாடுகள் சபை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. ஐ.நா.வுக்கான கைலாசத்தின் நிரந்தர தூதர் என்று கூறிய விஜயபிரியா, நித்யானந்தா கூறிய கருத்துகள் கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *