ரஷ்யா – உக்ரைன் போர் கடந்து வந்த பாதை!

1945 முதல் 1991 வரை ரஷ்யாவின் ஒரு பகுதியாகதான் உக்ரைன் இருந்தது. இந்நிலையில், ரஷ்யாவில் இருந்த பிரிந்து சென்ற உக்ரைன் சுயாதீன அரசாக உருவெடுத்தது. இருப்பினும் ரஷ்யா விடுவதாக இல்லை. எந்நேரத்தில் போர் மூலளாம் என்ற எச்சரிக்கை மணியை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் உக்ரைன் பாதுகாப்பிற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் சேர முடிவெடுத்து, அதற்கான வேலைகளை தொடங்கியது. அதுவரை சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த ரஷ்யாவிற்கு உக்ரைனின் இந்த நடவடிக்கை தீணிப்போடும் வகையில் அமைந்தது.

உலக நாடுகள் எண்ணியப்படி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர முயன்றதால் அது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு பெரும் தலையிடியாக அமையும் என ரஷ்ய முழக்கமிட்டது.

இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட போர் இன்று ஓராண்டை எட்டியுள்ளது. நாணயத்தின் இரு பக்கங்கள் போல இருதரப்பிற்கும் அழிவுகள் ஏராளம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்தவகையில் போரில் 8006 உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஆனால் இதனை விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதேநேரம் 13 ஆயிரத்து 287 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர்களில் 461 குழந்தைகள் உள்ளடங்குகின்றனர். 106 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரஷ்யா தரப்பில் 40 தொடக்கம் 60 ஆயிரம் போர் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 2 இலட்சம் வரையில் உயரும் என மேற்கத்தேய நாடுகள் கணித்துள்ளன.

அத்துடன் உக்ரைன் சார்பில் 9 ஆயிரம் போர் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழப்புகள் மாத்திரம் அன்றி, கற்பழிப்பு, கொள்ளை, துன்புறுத்தல்கள் என பல கொடுமைகள் நிகழந்தன. இவற்றோடு, 8.1 மில்லியன் உக்ரைன் மக்கள் போரின் கொடூரத்தில் இருந்து தப்பிப்பதற்காக இடம்பெயர்ந்தனர்.

இவர்களில் 5.6 மில்லியன் மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

மேலும் போரில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என விரும்பிய மேற்குலக நாடுகள், உக்ரைனுக்கு பல பில்லியன் கணக்கான பணம் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கின.

இதன்படி சர்வதேச அளவில் 220 பில்லியன் உதவி உக்ரைனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் அமெரிக்கா 159 பில்லியன், ஐரோப்பிய ஒன்றியம் 49 பில்லியன், உலக வங்கி 11.2 பில்லியன்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *