63 ஆயிரம் டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்ட முதலாவது Iphone

 

முதலாவது Iphone 63,000 டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Iphoneஇன் முதல் தொகுப்பைச் சேர்ந்த கைத்தொலைபேசி கேரன் கிரீனுக்கு (Karen Green) 2007ஆம் ஆண்டில் பரிசாகக் கிடைத்தது.

ஆனால் அவர் அதனைத் திறக்காமலே வைத்திருந்தார். 16 ஆண்டுகளுக்குப்பின் கேரன் அதனை 63,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏலம் இம்மாதம் 19ஆம் திகதி நடந்தது. 2007இல் கேரனின் நண்பர்கள் அவருக்குப் புது வேலை கிடைத்ததற்காக அவருக்கு அந்த Iphoneஐப் பரிசாய் வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் புதிதாக ஒரு கைத்தொலைபேசியை வாங்கியிருந்ததால் அவர் அதனைத் திறக்காமல் வைத்திருந்தார்.

Iphoneஇன் முதல் தொகுப்பைச் சேர்ந்த கைத்தொலைபேசிகள் திறக்கப்படாமல் புத்தம்புது நிலையில் இருக்கும் பட்சத்தில் அவற்றை விற்றால் கணிசமான தொகை கிடைக்க வாய்ப்புண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *