இரட்டை குடியுரிமையை துறக்க தயார் பஸில் அதிரடி அறிவிப்பு!

இரட்டைக் குடியுரிமையை துறப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பஸில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு 69 லட்சம் பேர் வாக்களித்தனர். அவர்களை கைவிடுவதற்கு நாம் தயாரில்லை.
மொட்டு கட்சி அழிந்துவிடும் என சிலர் நினைத்தனர். ஆனால் மீண்டு வந்துள்ளோம். உள்ளாட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
எனக்கு அரசியல் செய்வதற்கு இரட்டைக் குடியுரிமை தடையெனில் அதனை துறப்பதற்கு தயார் – எனவும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.