மனிதர்கள் உருவாக்கிய உலக அதிசயங்களில் ஒன்று Tokyoவின் சுரங்கப் பாதை!

கடலின் அடியில் 50 மீற்றர் ஆழத்தின் கீழே அமைக்கப் பட்டுள்ள உலகிலேயே நான்காவது மிக நீளமான கடல் வழி சுரங்கப் பாதை இதுவாகும். Takoyவின் Kawasaki மற்றும்-Kisarazu ஆகிய இரு பிரதேசங்களை இணைக்கும் இச்சுரங்கப் பாதை, முன்பு இரண்டரை மணிநேரத்தில் கடக்கவேண்டி இருந்த தூரத்தை தற்போது 15 நிமிட நேரத்தில் கடப்பதற்கு உதவியாய் இருக்கிறது.

மொத்தம் 23.7 கிலோமீற்றர் கொண்ட பாதையில் (Tokyo Wan Aqua-Line Expressway ) 9.5 கிலோமீற்றர் முழுவதும் கடலின் அடித்தளத்திற்கும் கீழே 50 மீற்றர் ஆழத்தில் காரில் பயணம் செய்தது புதிய அனுபவம்.

இருவேறு முனைகளில் இருந்து இருவேறு பொறியிலாளர் குழுக்கள் ஒரே நேர்கோட்டில், ராட்சத இயந்திரங்களைக் கொண்டு சுரங்கம் தோண்டும் பணியை ஆரம்பித்து, பல நாள் பணியின் பின்னர் ஒரு மையப்புள்ளியில் சந்தித்துக் கொள்ளும் காட்சியை ஒரு விவரணத் திரைப்படமாகத் திரையிட்டுக் காட்டினார்கள். மெய் சிலிர்த்தது. ( பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கடலினடியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையும் இவ்வாறுதான் உருவாக்கப்பட்டதாம்)

1989 ஆண்டில் ஆரம்பித்து,1997ம் ஆண்டு நிறைவு செய்யப்பட்ட இந்த சுரங்கப்பதையின் Kisarazu முனையானது, பெருமளவு மக்கள் கூடும் ஒரு சுற்றுலாத் தலமாக தற்போது மாறியுள்ளது.

75 அடி விட்டத்தைக் கொண்ட,இச்சுரங்கப் பாதையை அமைக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தின் முக்கிய பாகத்தையும் அங்கு காட்சிக்கு வைத்துள்ளார்கள். அப் பிரம்மாண்டத்தின் கீழ் நின்றபோது, எறும்பு ஒன்று நிற்பது போல் உணர்ந்தேன்.

பதிவு – B.H. Abdul Hameed sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *