ஆணுறையில் வாழைப்பழம் அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

ஆணுறையில் வாழை பழம் ஒன்றை வைத்து வாலிபர் ஒருவர் செய்த செயலானது  மருத்துவ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் லோவா நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு தனது பாலியல் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 34 வயதான குறித்த இளைஞர், ஆணுறைக்குள் வாழை பழம் ஒன்றை வைத்து அதனை உட்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு கடுமையாக வயிற்று வலி மற்றும் வாந்தி என்பன ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் அவர் உணவு மற்றும் நீ அருந்தவும் முடியாமல் சில தினங்களாகத்  தவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது வயிற்றை  ஸ்கேன் செய்து பார்த்த  மருத்துவர்கள், அவரது சிறு குடலில் ஆணுறையால் சுற்றப்பட்ட வாழை பழம்  ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்தே அந்த நபர், ஆணுறைக்குள் வாழை பழம் ஒன்றை வைத்து அதனை உட்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரது வயிற்றில் இருந்த வாழை பழத்துடன் கூடிய ஆணுறையை மருத்துவர்கள்  நீக்கியுள்ளனர்.

இந்நிலையில் அவர் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

எனினும், இப்படியொரு சம்பவம் முதன்முறையாக மருத்துவ உலகில் இடம்பெற்றுள்ளதாக பிரபல மருத்துவ இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *