சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் விபத்து 23 பேர் பலி பலர் காயம்!

பெருவில்  60 பயணிகளுடன் பயணித்த சுற்றுலா பேருந்து  விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை ஐந்து மணிக்கு (உள்ளூர்) இடம்பெற்றுள்ளதாகவும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்த 160 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாட்டின் மேற்குக் கரையோரமாகச் செல்லும் ஒரு பெரிய நெடுஞ்சாலையான பனமெரிகானா நோர்டே வழியாக பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது.

குறித்த பேருந்து 60 பயணிகளுடன் Limaவில் இருந்து Tumbes க்கு வடக்கே சென்று கொண்டிருந்ததாக  சுற்றுலா நிறுவனமான Aguila Dorada தெரிவித்துள்ளது.

விப்த்தை அடுத்து தலைநகர் லிமாவில் இருந்து வடமேற்கே 683 மைல் தொலைவில் உள்ள தலாராவில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பெருவில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகளினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு 2020 இல் நாட்டின் சாலை விபத்துகளில் 4,414 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *