அமெரிக்காவில் பயங்கரம் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சக ஊழியர்கள் 7 பேரைப் பிள்ளைகள் முன்பு கொன்றதாக நம்பப்படும் பண்ணை ஊழியர் தடுப்புக்காவலில் உள்ளார்.
அவர் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சான் மடியோ பகுதியில் உள்ள பண்ணைகளில் அந்தச் சம்பவம் நடந்தது.
67 வயது சுன்லி ஸாவ் (Chunli Zhao) கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாகிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களும் காயமுற்றோரும் சீன இனத்தைச் சேர்ந்தவர்கள்.
லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்து 48 மணி நேரத்திற்குள் இந்தச் சம்பவம் நேர்ந்திருக்கின்றது.
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஏற்பட்ட சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.