கொரோனா தகவல்களை உடனுக்குடன் வழங்குமாறு சீனாவுக்கு வலிறுத்தல்!

சீனாவில் முதன்முறையாக 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடந்த 1ம் திகதி முதல் 20ம் திகதி வரை சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சீனாவில் தோன்றிய பி.எப்.7 புதிய வைரஸ் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக உரிய தகவல்களை சீனா வெளியிட வேண்டும் எனவும் சீனாவில் கொரோனா அதிகரிப்பு கவலைக்குரியது எனவும் பிற நாடுகள் கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்திருந்தார்.
தற்போது கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்புடன் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சீனாவில் கொரோனா பாதிப்பு , சிகிச்சை முறை, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது கொரோன பாதிப்பு தொடர்பான புள்ளி விவரங்களை சீனா உடனுக்குடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக உலக சுகாதார துறை தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது, ” சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்து அந்நாட்டு பிரதிநிதிகளுடன் உலக சுகாதார அமைப்பு குழுவினர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்