சீனாவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ரத்த தானம் செய்ய மக்களுக்கு அழைப்பு!

சீன மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களுக்கு தேவையான ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. கொரோனாவுக்கு மத்தியில் கடுமையான குளிர்கால சூழலால், பல மாகாணங்களில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து ஷான்டாங் ரத்த மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தேவையான ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மிகவும் செறிவூட்டப்பட்ட ஜினன் ரத்த சேகரிப்பு மற்றும் விநியோக மையத்தில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஓ மற்றும் ஏ ரத்தப் பிரிவை கொண்ட மக்கள், ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது. ஷான்டாங் மாகாணம் மட்டுமின்றி பிற மாகாணங்களிலும் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில், தினமும் ரத்த தேவையை பூர்த்தி செய்ய சுமார் 1,200 பேர் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று கோரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *