பசலைக்கீரை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பசலைகீரையை உண்பதால் கிடைக்கும் பல நன்மைகள் ! ஒவ்வொரு கீரையிலும் வெவ்வேறு விதமான சத்துக்கள் உள்ளன.அந்த வகையில் பசலை கீரை மிகவும் குறிப்பிடத்தக்கது.

பசலை கீரையில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளன. இந்த பசலை கீரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை.உணவே மருந்து’என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

1. பசலை கீரைhttps://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2427505934897722&output=html&h=430&slotname=5834398921&adk=2218416776&adf=30695828&pi=t.ma~as.5834398921&w=412&lmt=1672070335&rafmt=11&format=412×430&url=https%3A%2F%2Ftamilhealth24.com%2F%25e0%25ae%25aa%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%2589%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=1&wgl=1&dt=1672070334702&bpp=12&bdt=2357&idt=698&shv=r20221207&mjsv=m202212010101&ptt=9&saldr=aa&abxe=1&prev_fmts=412×343%2C412x430&correlator=3217288562165&frm=20&pv=1&ga_vid=673262223.1672070335&ga_sid=1672070335&ga_hid=683663486&ga_fc=1&rplot=4&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=1753&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C44779794%2C44780792&oid=2&pvsid=2134265374943921&tmod=863200740&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=896&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=RoIphZrGJc&p=https%3A//tamilhealth24.com&dtd=726

இந்த பசலை கீரையின் தாவரப்பெயர் ஸ்பினாச்சியா ஒலிரேசியா என்பதாகும். ஆயுர்வேதத்தில் இந்த பசலை கீரையை அமிர்த வல்லாரை என்று சிறப்புப் பெயரில் குறிப்பிடுவார்கள்.

இவற்றின் இலைகள் சற்று தடிமனாகவும்,முக்கோண வடிவத்திலும் காணப்படும். இந்த பசலையிலே பல்வேறு விதமான ரகங்களும் உள்ளன.

உதாரணமாகக் கொடிப்பசலை,வெள்ளைப் பசலை,ஆற்றுப் பசலை,கொத்துப் பசலை போன்ற வகைகளைக் குறிப்பிடலாம்.

2. பசலைக்கீரையின் மருத்துவ பலன்கள் என்ன?

டி எச் ஏ சத்து மூளை வளர்ச்சிக்கும்,மூளையின் செயல்பாட்டிற்கும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் மிகவும் அவசியமானது. டி எச் ஏ சத்து எனப்படுவது ஒமேகா 3 பேட்டி ஆசிட் உட்பிரிவு தான்.

பசலைகீரையை உண்பதால் நினைவாற்றல், மூளை செல்கள் சிதைவு ஏற்படாமல் இருத்தல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு டி எச் ஏ சத்து தேவையாக உள்ளது.

இதற்காகப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாக்கெட் செய்த மாவு மாதிரியான பொருட்களை வாங்கித் தருகின்றனர். அதற்கெல்லாம் அவசியமே கிடையாது.

பசலைகீரையை உண்பதால் வாரம் இரண்டு முறை பசலை கீரையைச் சேர்த்தாலே போதும் இயற்கையான வழியில் போதுமான டி.எச்.ஏ சத்து குழந்தைகளுக்குச் சென்று சேர்ந்துவிடும்.

3. சருமம் பளபளப்பு அடையும்

பசலை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருபவர்களுக்குச் சருமம் பளபளப்பு அடையும். இதனால் அவர்களின் முகம் பிரகாசமாகக் காணப்படும்.

மேலும் பசலை இலைகளைச் சாறு பிழிந்து உடலில் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவுவதன் மூலம் நல்ல பலன் கிட்டும்.

மேலும் தீ காயங்கள்,தழும்புகள்,பருக்கள் உள்ள இடங்களில் இந்த சாற்றைத் தடவுவதன் மூலம் சிறந்த முறையில் நிவாரணம் பெறலாம்.

4.சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீரும்

இந்த பசலை கீரை சிறுநீர் கடுப்பு,சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

மேலும் சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருந்தாலும், இந்தக் கீரை சிறுநீரைப் பெருக்கி வெளியேற்ற துணை புரியும்.

மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைக்குச் சிறந்த மருந்தாகும்.

5.எலும்புகள் வலுவடையும்

பசலை கீரையில் நிறைந்துள்ள சுண்ணாம்புச் சத்து எலும்புகள் மற்றும் பற்களை வலிமை அடைய உதவும்.

வளர்ச்சி பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டும். பொரியலாகவோ, சூப்பாகவோ , கூட்டாகவோ சமைத்துத் தரலாம்.

6.எடை குறைய உதவும்

பசலை கீரையில் குறைந்தஅளவு கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்து உள்ளது. அதே சமயம் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.

உடல் எடை கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துபவர்கள் இந்த பசலை கீரை ஏற்ற உணவாகும்.

7.கண் பார்வைக்குச் சிறந்தது

பசலை கீரையில் விட்டமின் ஏ சத்து நிறைவாக உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான சத்தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *