கின்னஸ் சாதனைப் படைத்த உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி வெடித்து சிதறியது!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருந்த 50 அடி உயர உலகின் மிக பெரிய மீன் தொட்டி திடீரென வெடித்து சிதறியது. ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் அலெக்சாண்டர்பிளாட்ஸ் என்ற இடத்தில் மத்திய சதுக்கம் பகுதியில் ரேடிசன் புளூ என்ற பிரபல ஓட்டல் ஒன்று அமைந்து உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு 50 அடி உயரத்தில், 30 அடி அகலத்தில் கண்ணாடி வடிவில் உலக அளவில் மிக பெரிய மீன் தொட்டி இங்கு கட்டப்பட்டது. அந்த காலத்தில் ரூ.115.82 கோடி மதிப்பில் உருவான இந்த மீன் தொட்டி கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று உள்ளது. மீன் தொட்டியில் 100 வகையான மீன்கள் என மொத்தம் 1,500 மீன்கள் வரை பார்வைக்காக வளர்க்கப்பட்டன. இந்த ஓட்டலில் தங்க வருபவர்கள், உருளை வடிவில் அமைந்த மீன் தொட்டியின் கண்ணாடி பகுதியின் வழியே, உள்ளே நீந்தி செல்ல கூடிய கடல்வாழ் மீன் இனங்களை பார்வையிட இயலும். இந்த நிலையில் திடீரென மீன்தொட்டி வெடித்து சிதறியது. அப்போது ஓட்டலில் தங்கியிருந்த 300 பேர் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். மீன்கள் அனைத்தும் இறந்து விட்டன. இது சதித்திட்டமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *