இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஆங்கில வார்த்தை!

இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை gaslighting என்று தேர்ந்தெடுத்துள்ளது.

அமெரிக்காவின் ஆகப் பழைமையான அகராதி  பதிப்பாளரான Merriam-Webster இதனை தெரிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு அந்த வார்த்தைக்கான தேடல் 1,740 சதவீதம் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவரைத் தனது சொந்தப் பலனுக்காகத் தவறான பாதையில் இட்டுச்செல்வது என்பது அந்த வார்த்தையின் அர்த்தமாகும்.

பொய்த் தகவல்கள், சதிகள் ஆகியவை பற்றி அதிகம் பேசப்படும் இந்தக் காலக்கட்டத்தில் அந்த வார்த்தை மீண்டும் பயன்படுத்தப்படுவதாக Merriam-Webster தெரிவித்தது.

ஆண்டின் ஒவ்வொரு நாளும் அந்த வார்த்தை பலமுறை தேடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

அது முதன்முறையாக 20ஆம் நூற்றாண்டில் லண்டனில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக அதிகம் தேடப்பட்ட மேலும் சில சொற்கள்:

oligarch

omicron

codify

LGBTQIA

sentient

loamy

raid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *