48500 ஆண்டுகள் பழைமையான Zombie virus கண்டுபிடிப்பு!

சைபீரியாவில், Zombie virus எனப்படும் ஆபத்தான வைரஸை  ஐரோப்பாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உறைந்திருந்த ஏரியின் பனிப்பாறைகளுக்கு கீழே இருந்த 48 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ளது.

இந்த நிலையில், இதில் 13 புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென ஐரோப்பாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருவேறு இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில், வைரஸ்கள் இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *