இங்கிலாந்து Liverpool அணியில் இணைகிறார் அம்பானி!

உலகின் எட்டாவது கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி பிரித்தானியாவின் தலைசிறந்த லிவர்பூல் கால்பந்து அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 90 பில்லியன் பவுண்டுகள் சொத்துமதிப்பு கொண்ட இந்தியரான முகேஷ் அம்பானி, உலகின் எட்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார். ஏற்கனவே லிவர்பூல் கிளப் தொடர்பில் அவர் விசாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அணியை வாங்க விருப்பம்

ஆனால், துபாய், பஹ்ரைன் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் சிலர் குறித்த அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தற்போதைய சூழலில் 4 பில்லியன் பவுண்டுகளுக்கு லிவர்பூல் அணியை விற்பனை செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைசிறந்த அணியை குறிவைக்கும் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி | Liverpool Approached Eighth Richest Man Ambani

ஆனால், மிகப்பெரிய விளையாட்டுப் பிரியரான முகேஷ் அம்பானி, குறித்த தொகை கண்டு பின்வாங்குபவரல்ல என்றே கூறுகின்றனர். இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் அணியான மும்பை இந்தியன்ஸ் இவரது அணி என்பதுடன் இந்திய கால்பந்து சூப்பர் லீக் போட்டிகளுக்கான கட்டமைப்பில் முக்கிய பங்காற்றியவர் முகேஷ் அம்பானி.

தற்போது ஐரோப்பாவிலேயே முதன்மையான கால்பந்து அணிகளில் ஒன்றான லிவர்பூல் மீது இவரது பார்வை பட்டுள்ளது என்றால், கண்டிப்பாக பல மில்லியன் தொகை செலவிட அவர் தயாராகவே இருப்பார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *