உலக மக்கள்தொகை அடுத்த வாரம் அதிகரிக்கும்!

உலக மக்கள்தொகை அடுத்த செவ்வாய்க்கிழமை 8 பில்லியனை எட்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதை அடுத்து உலகின் அதிகரிக்கும் வெப்பநிலை, மனிதர்கள் பூமியின் வளங்களை எப்படிப் பயன்படுத்துகின்றனர் ஆகியவை குறித்த அக்கறைகள் அதிகரித்திருக்கின்றன.
பூமியின் மக்கள்தொகை மேலும் வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வளர்ச்சி மெதுவடைந்திருக்கும் என்றும் வட்டாரரீதியான ஏற்றுத் தாழ்வுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.