விராட் கோலி தம்பதி தங்கியிருந்த ஓட்டல் அறையை வீடியோ எடுத்து வெளியிட்டதற்கு கண்டனம்

ஆஸ்திரேலியாவில் தான் தங்கியிருந்த அறையை வீடியோ எடுத்தது வெளியிட்டமை குறித்து வருத்தத்துடன் ரசிகர்களை விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கண்டித்திருக்கின்றனர்.

விராட் கோலியின் ரசிகர் ஒருவர், கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறையினுள் நுழைந்து ‘இதுதான் கோலி தங்கியிருக்கும் அறை என்று அறையை சுற்றிக் காட்டும் விதமாக வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு விராட்கோலியின் ரசிகர்கள் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

பலர் இதை ஆர்வதுடன் பகிர்ந்து வந்தாலும் சிலர் ‘இது விராட்கோலியின் தனிப்பட்ட விடயங்களில் குறுக்கிடுவதாக இருக்கிறது. அவரது ‘Privacy-க்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். 

எப்படியிருப்பினும் இருப்பினும், இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. இந்நிலையில் வைரலாகி வரும் இந்த வீடியோவைக் கண்ட விராட்கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இந்த வீடியோவைத் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் இந்தச் செயலைக் கண்டித்து வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து பதிவிட்டுள்ள விராட்கோலி, “ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களை நேரில் காண ஆசைப்படுவதைப் பாராட்டுகிறேன். ஆனால், இந்த வீடியோப் பதிவு என்னை அதிர்ச்சியடையச் செய்கிறது. இது எனது தனிப்பட்ட விடயங்களில் (privacy) குறுக்கிடுவதாகக் கருதுகிறேன். இது சரியானதும் அல்ல. எனது தனிப்பட்ட அறையில் கூட எனக்குப் பிரைவசி இல்லையென்றால் பிறகு வேறெந்த இடங்களில் நான் எனது தனிபட்ட நேரங்களைச் செலவிடுவது. இதுபோன்ற தீவிர ரசிக செயல்களில் எனக்கு சற்றும் உடன்பாடியில்லை. இது அத்துமீறல். தயவு செய்து அனைவரது தனிப்பட்ட விசயங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். யாரையும் பொழுதுபோக்குப் பொருளாக நடத்த வேண்டாம்”என்று தனது வருத்தத்தைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது பற்றிக் கூறியுள்ள அனுஷ்கா சர்மா, “இது மிகவும் தவறான செயல். அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். தங்களது தனிப்பட்ட விடயங்கள் பற்றிய செய்திகள் அல்லது புகைப்படங்கள் பொதுவெளியில் பகிரப்படுவதில் விருப்பம் இல்லை என்று கூறிவரும் இருவரும் தங்களது குழந்தையின் புகைப்படத்தை பகிரவேண்டாம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ குறித்தும் தங்களது தனிப்பட்ட விஷயங்களில் யாரும் குறுக்கிட வேண்டாம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *