கொழும்பை மீண்டும் முடக்க திட்டம்!

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் மூலம் முடக்க திட்டமிட்டுள்ள நடவடிக்கைக்கு அரசியல்வாதிகள் பலரும் ஆதரவு வழங்க ஆரம்பித்துள்ளனர்.

ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை, பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 2 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என மக்கள் போராட்டம் வெகுவிரைவில் கிளர்ச்சியாக வெளிப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மக்கள் போராட்டம் கிளர்ச்சியாக வெளிப்படும். எரிபொருள்,எரிவாயு விநியோக கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது,இனி எந்த பிரச்சனையும் இல்லை என அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.

மக்கள் தமது தொழிற்துறை மற்றும் சேவை நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதனால் பொருளாதார பாதிப்பு வெகுவிரைவில் பன்மடங்கு தீவிரமடையும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கம் நாட்டு மக்களை அச்சுறுத்துகிறது.அரசாங்கத்திற்கு எதிராக போராடுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக புதன்கிழமை கொழும்பில் இடம்பெறும் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *