பசிபிக் கடல் மீது பறந்த மர்ம பொருட்களால் பரபரப்பு!

பசிபிக் கடல் மீது கூட்டமாக பறக்கும் மர்ம பொருட்கள் வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா என ஆய்வு செய்ய நாசா சிறப்பு குழுவை அமைத்துள்ளது. பூமியை தவிர மற்ற கிரகரங்களிலும் மனிதர்கள் அல்லது விசித்திரமான ஏலியன்கள் வசிப்பதாக சந்தேகம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. சில சமயங்களில் வேற்று கிரகவாசிகளின் விமானங்களான பறக்கும் தட்டுகள் வானில் தென்பட்டுள்ளன.

ஆனால் இதைப் பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. இதற்கிடையே, பசிபிக் கடலின் மீது கடந்த 2 மாதமாக விமானங்களை இயக்கிய பல்வேறு நாட்டு விமான நிறுவனங்களின் விமானிகள், அங்கு மர்ம விமானங்கள் பறப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறி உள்ளனர்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது. இந்நிலையில், வானில் காணப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை ஆய்வு செய்ய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. 16 பேர் கொண்ட இந்த குழு, 9 மாதம் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு இன்று முதல் தொடங்குவதாக நாசா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *