இடைக்கால வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம்!

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இன்று (ஆகஸ்ட் 3) ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் தில்லத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு :

* 2022 செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 12% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படும்

* அரசு மற்றும் அரச பங்களிப்போடு இயங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஓய்வூதிய வயது 60 ஆக குறைக்கப்படும்

* கருவூலத்தின் கீழ் ஒரு சுயாதீனமான தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுகள்.

* தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை அருகில் உள்ள மாநகரசபை அல்லது நகரசபையுடன் இணைப்பதற்கான முன்மொழிவுகள்.

* இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் மொத்த பங்குகளில் 20% த்தை வைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவுகள்.

* கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2,500 ரூபாய் வழங்குவதற்கான யோசனைகள்.

* 61,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு மாதம் ரூ.10,000 மானியம் வழங்குவதற்கான முன்மொழிவுகள்.

* அரசு வங்கிகளுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ.680 மில்லியன் (வட்டி நீங்கலாக) தள்ளுபடி செய்தல்

* கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையை குருநாகலில் நிறுவுவதற்கான முன்மொழிவுகள்.

* வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவுகள்,

* புகையிரத போக்குவரத்து சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கும், களனிவெளி புகையிரத பாதையை சிறந்த திட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும் தனியார் துறை முதலீடுகளை பயன்படுத்துவதற்கான பிரேரணைகள்.

* எதிர்காலத்தில் அரசாங்கத் தேவைகளுக்காக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மட்டுமே கொள்வனவு செய்வதற்கும் எதிர்காலத்தில் நிலக்கரி எரிபொருளில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும் முன்மொழிவுகள்.

* நாட்டின் வளங்களில் இருந்து வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள்.

* கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து மற்றும் பொது சேவைகள் போன்ற முன்னுரிமைத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவுகள்

*பொருளாதார நெருக்கடியால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் பயன்பெறும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

* பால் உற்பத்தியை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்

* இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரச காணிகள் வழங்கப்பட்டு,  அத்தகைய நிலங்களைப் பயன்படுத்தி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் திட்டங்கள் மேற்கொள்ள  ரூ.  50 மில்லியன் ஒதுக்கப்படும்.

* உள்ளூர் விவசாயப் பொருட்களை பொதி செய்யும் தொழிற்சாலைகளுக்கு வரிச் சலுகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *