ஓடாமல் இருக்கும் வாகனங்களுக்கு வாடகை செலுத்தும் அரசு!

தனியார் நிறுவனங்களிலிருந்து அரசினால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுமார் 250 வாகனங்கள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் பற்றாக்குறையால் குறித்த வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்ட நிலையில் மாதாந்த வாடகை செலுத்தப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு வாகனத்துக்கு குறைந்தபட்ச மாத வாடகை 2 இலட்சம் ரூபாவுக்கு அதிகமாகும் என கூறப்படுகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் நிதியமைச்சு அறிவுறுத்தியுள்ள நிலையில், பல அரச நிறுவனங்கள் அந்த அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து, வாடகை செலுத்தி வாகனங்களை வைத்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது