காதலிக்கு பரிசளிக்க இரவு முழுவதும் கழிவறையில் பதுங்கி 7 செல்போன்களை திருடிய காதலன்!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த 27 வயது இளைஞர். முனார்ப் காதலிக்கு கடந்த 28ஆம் திகதி பிறந்தநாள் வந்துள்ளது. அதனால் அந்த பெண்ணுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்த அசத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார் இளைஞர். அதன்படி, விலையுயர்ந்த செல்போனை பரிசாக தர முடிவு செய்தார் முனார்ப். இதை தொடர்ந்து ஜேடிபி நகர்ப்பகுதியில் இயங்கி வரும் மிகப்பெரிய செல்போன் ஷோரூம் ஒன்றிற்குள் இரவு நுழைந்தார்.

அப்போது அந்த ஷோரூம் மூடும் நேரம் என்பதால், கதவுகளை அடைத்து பூட்ட ஊழியர்கள் தயாராகி கொண்டிருந்தனர். உடனே இந்த இளைஞர் கடையின் பாத்ரூமுக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் நுழைந்து கொண்டார். கடையை ஊழியர்கள் மூடிவிட்டு சென்றபிறகு, பாத்ரூமில் இருந்து வெளியே வந்து அப்துல், விலைஉயர்ந்த செல்போன்களை தேடினார். அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து போன்களுமே அழகாக இருந்ததால், அவைகளில் இருந்து 7 செல்போன்களை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார். பிறகு மறுபடியும் அதே கடையின் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டார். மறுநாள் காலை வரை இந்த பாத்ரூமுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார்.

காலையில் வழக்கம்போல், ஊழியர்கள் கடையை திறந்து வந்துள்ளனர். இவரும் எதுவும் தெரியாததுபோல், பாத்ரூமில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார். ஆனால் அவர் எடுத்து சென்ற செல்போன்களில் ஒன்று கீழே தரையில் விழுந்து கிடந்துள்ளது. அதைபார்த்த கடை ஊழியர் ஒருவர் பார்த்து உள்ளார். அப்போதுதான் கடையை திறந்துள்ள நிலையில், கீழே எப்படி செல்போன் விழுந்திருக்கும் என்று ஆராயந்தபோது தான், மேலும் சில செல்போன்கள் காணாமல் போனதும் தெரியவந்தது.

இதையடுத்து, உடனடியாக பொலிஸில் புகார் தரப்பட்டது. பொலிஸாரும், செல்போனில் உள்ள ஐஎம்இஐ நம்பரை வைத்து, திருடப்பட்ட செல்போன் இருக்கும் இடமும், அப்துல் முனாப் பற்றிய விவரங்களும் தெரியவந்தது. பிறகு பொலிஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் பிடிஎம் லேஅவுட் பகுதியில் தங்கி ஒரு ரெஸ்டாரெண்ட்டில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. திருடிய 7 செல்போனில் 6 செல்போனையும் காதலிக்கு பரிசளித்துவிட்டு, மீதி ஒன்றை அப்துல் முனாப் பயன்படுத்த தொடங்கி உள்ளார்.அவைகளின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *