கோட்டாபய இலங்கை திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க reuters செய்திக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச இந்த தருணத்தில் இலங்கைக்கு திரும்பினால், அது நாட்டில் மேலும் அரசியல் பதற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவர் நாடு திரும்புவார் என்ற தகவல் எதுவும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்பாடு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் எட்டப்படும் என விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார், மேலும் எரிபொருள், உணவு மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு அடுத்த ஆண்டு ஏனைய மூலங்களில் இருந்து 3 பில்லியன் டொலர்களை இலங்கை பெற வேண்டியுள்ளது.

இலங்கையர்கள் தங்கள் பொருளாதார சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க reuters செய்திக்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *