வயதானவர்களுக்கு பதிலாக அரகலயவில் உள்ள இளைஞர்களை பாராளுமன்றத்திற்கு உள்வாங்குங்கள்!

நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வகட்சி ஆட்சியமைப்பதே சிறந்த வழி எனும் சூழ்நிலையில் அண்மையில் அரகலய பிரசாரத்தில் ஈடுபட்ட ஐவரை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நியமிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர் முன்வைத்துள்ளனர்.

நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கேற்கும் முயற்சியில் இளைஞர்கள் தங்களது புதிய யோசனைகளுடன் பாராளுமன்றத்தில் பிரவேசிக்க வேண்டும் . எனவே, அதிக வயதான அமைச்சர்களை பாராளுமன்ற ஆசனங்களில் இருந்து நீக்குமாறும் அவர்களுக்கு பதிலாக மேற்படி நபர்களை நியமிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பாராளுமன்ற ஆசனங்களை இளைஞர் சக்தியுடன் மாற்றுவது என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்.
அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும், நாட்டில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து அரசியலமைப்பு பற்றிய புரிதல் வேண்டும்.இந்த விகிதாசார வாக்களிப்பு முறையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாலும் இளைஞர்கள் ஒருபோதும் பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாது.

தற்போதைய விகிதாச்சார வாக்களிப்பு முறையின் கீழ், அதே பழைய போத்தலை கழுவிய பின் புதிய மதுவை நிரப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது. பாராளுமன்றத்தில் உள்ள அதிக வயதான அமைச்சர்கள் நாட்டின் எதிர்கால பயணத்தில் நாட்டின் நன்மைக்காக பங்களிக்க வேண்டும்.

அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட குழுவினர் மேற்படி யோசனையை முன்வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இது தொடர்பில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *