தேனீர் விற்றவர் கையில் புரளும் பல ஆயிரம் கோடிகள்!

கலாநிதி மாறன்! உலக தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான பெயர். புகழ்பெற்ற சன் நெட்வொர்க்கின் நிறுவனர் தான் கலாநிதி மாறன். இவரின் இன்றைய சொத்து மதிப்பு $2.3 பில்லியன் ஆகும்.

சன் நெட்வொர்கில் பல சேனல்கள் வரும் நிலையில் இந்தியா மட்டுமின்றி பிரித்தானியா, இலங்கை, கனடா உள்ளிட்ட 33 நாடுகளில் பார்க்க முடியும். 1991-ம் ஆண்டு மார்ச் 13-ம் திகதி சன் நெட்வொர்க் துவங்கப்பட்டது.

கலாநிதி மாறன் 1965 ம் ஆண்டில், தமிழ்நாட்டில் பிறந்தார். அவர் நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் குடும்பத்தின் மிக முக்கியமான வாரிசு ஆவார். இவருடைய தந்தை முன்னாள் மத்திய வர்த்தக அமைச்சர், திரு முரசொலி மாறன் ஆவார்.

இருவருடைய தலைமையின் கீழ் சன் நெட்வொர்க் நிறுவனம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்து வளமான காலத்தை அனுபவித்து வருகின்றது. கலாநிதி மாறன், சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றார்.

அதன் பின்னர் அவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவப் பருவத்தில் அவர் ஒரு சராசரி மாணவராக இருந்த போதிலும், அவர் மிகவும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டிருந்தார். கலாநிதி மாறன் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.

பட்டப் படிப்பை முடித்த பிறகு, அவர் எம்பிஏ பட்டம் பெற ஸ்க்ராண்டன் பல்கலைக் கழகம், பென்சில்வேனியா, அமெரிக்கா சென்றார்.

இத்தனை இத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான கலாநிதிமாறன், ஆரம்பத்தில் என்னென்ன தொழில்கள் செய்தார் தெரியுமா?

கல்லூரியில் படித்த முடித்தவுடன், அவரது தந்தையும், அவரது தாத்தாவும் அவருக்கு கொடுத்த பணி என்ன தெரியுமா? முரசொலி பத்திரிக்கையில் பிழைத் திருத்தம் செய்யும் “ப்ரூஃப் ரீடர்” வேலை தானாம். அதை மாத சம்பளத்திற்கு செய்து வந்திருக்கிறார் கலாநிதிமாறன்.

அதே நேரத்தில் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நெருங்கிய நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஊட்டியில் இருந்து டி பாக்கெட்டுகளை வாங்கி அதை சைக்கிள்கள் வைத்து திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி தினமும் ஆயிரக்கணக்கான பொட்டலங்களை சப்ளை செய்து இருக்கிறார்.

அந்த கணக்கு வழக்குகளையும் சரியாக பார்த்து, அதில் லாபமும் ஈட்டி இருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சக்கரவர்த்திகளில் ஒருவரான கலாநிதிமாறனின் முதல் தொழில் ‘டி’ பாக்கெட்டுகள் விற்றது என்றால் நம்ப முடியுமா? ஆனால் உண்மை இதுதான்.

இத்தனை தடைகளை கடந்து தான் அவர் இன்று இந்த நிலையை அடைந்து இருக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

1991 ஆம் ஆண்டில், கலாநிதி மாறன் கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமதி காவேரி மாறன் அவர்கள் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி பெற்றுள்ளார். இவர்களுக்குக் காவ்யா என்கிற ஒரு பெண் குழந்தை 1992 ம் ஆண்டுப் பிறந்தது . காவ்யா தான் சன் ரைசர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *